பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை!

Monday, March 26th, 2018

பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எந்தவிதத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் நிறுவனமல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை  அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 09 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: