பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு அரசாங்கத்தின் சொந்த வீட்டு!
Saturday, August 19th, 2017
அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் சொந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் ஹூலந்தாவ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளும் அவற்றுக்கான காணி உரித்துகளும் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள அனைத்துப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஆறுமுகம் தொண்டமானின் தாயார் காலமானார்!
அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம் ...
கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


