பெண் பேருந்து சாரதி பிணையில் விடுதலை!
Friday, August 12th, 2016
கைது செய்யப்பட்டிருந்த நாட்டின் முதலாவது பயணிகள் பெண் பேருந்து சாரதியான லக்ஸி சசிந்தாவை பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அரச நிறுவகம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்து அதன் அதிகாரிகளை தூற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பியதிலக ஹரிச்சந்திர மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த பெண் சாரதி நேற்று நாரஹென்பிட்ட காவற்துறைக்கு வாக்கு மூலம் வழங்க சென்றிருந்தார்.
இதன்போது, அவர் உள்ளிட்ட ஐந்து பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பேருந்து ஒன்றுக்கான வீதி அனுமதி பத்திரம் தொடர்பிலேயே, அவர் குறித்த அதிகாரிகளை தூற்றியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
435 சிறுவர் காப்பகங்களில் 15 ஆயிரம் சிறார்கள்!
சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விட...
இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உய...
|
|
|


