பெண்கள் மீதான வன்முறைக்கு அதிகரித்துள்ள  கட்டுப்பாடற்ற இணையத்தளங்களின் பாவனையே காரணம் – யாழ்.பொலிஸார்

Wednesday, November 9th, 2016
யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்’ என்று யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐநா மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் பரோனெஸ் அனெலி நேற்று யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்தார். இதன் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிறுவர் மற்றும் பெண்கள் விவாகார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரச சார்பற்ற நிறுவனமான ‘வின்’ என்று கூறப்படுகின்ற தேவை நாடும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இந்த வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டு விபரங்களை இவர் பார்வையிட்டார். அதே காலப்பகுதியில் ‘வின்’ அமைப்பில் பதிவாகிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளின் பட்டியலை அதன் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
‘வின்’ அமைப்புக்கு கிடைத்த முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளைக் காட்டிலும் அதிகம் இருந்தமையை அவதானித்த இராஜாங்க அமைச்சர் காரணம் என்ன என்பதை கேட்டறிந்தார்.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள மது, போதைப்பொருள் பாவனைகள், கட்டுப்பாடற்ற இணையத்தளங்களின் பாவனை, பாடசாலை மாணவர்களிடம் நவீன வகை கையடக்கத் தொலைபேசி பாவனை போன்றன பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு வழியமைப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்துடன் இணைந்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்தினை நடத்தியபோது, பாதிக்கப்படும் பெண்கள் முறைப்பாடு செய்ய முன்வருதில்லை. இதனால், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு, பெண் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் முறைப்பாடு செய்வதற்கு பெண்கள் முன்வருவதில்லை. காரணம் சமூக கட்டுப்பாடுகள் என்று தெரிவித்தார். தழிழ் கலாச்சாரத்தை பொறுத்த வரையில் பெண்கள் பொலிஸில் இணைந்து சேவை ஆற்றுவதை 90 வீதமானவர்கள் விரும்புவதில்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

jaffna-police-stationjpg-720x480

Related posts: