பெண்கள், சிறுவரை பாதுகாப்பதற்காக அலைபேசிச் செயலி அறிமுகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

Saturday, January 28th, 2017

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க அலைபேசிச் செயலி ( Android App) ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டத்தரணி தில்ருக்ஷி டி.சில்வா தெரிவித்துள்ளார்.

முதலில் அன்ரோய்ட் (Android) திறன்பேசிகளில் அறிமுகமாகும் இந்த செயலி (App)  ஊடாக, தாம் இருக்கும் பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்டவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது, ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த செயலி, விரைவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி தில்ருக்ஷி டி.சில்வா தெரிவித்தார்.

இந்த செயலியின் பெயர், விவரம் தொடர்பில், இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

post-1432

Related posts: