பூட்டிய அறையில் யுவதியின் சடலம்!
Friday, October 7th, 2016
வல்வெட்டித்துறை மாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பூட்டிய அறையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெற்றிவேல் நிரோஜினி (வயது – 25) என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வல்வெட்டித்துறை பொலிஸார் சடலத்தினை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பில் நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts:
பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிராக மனுத்தாக்கல்!
தென் ஆப்பிரிக்காவில் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு!
மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்ப...
|
|
|


