புனர்வாழ்வு யாசகர்களும் உட்படுத்தப்படுவர்!

Tuesday, April 25th, 2017

நாட்டில் யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்படும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாசகம் பெறுபவர்கள் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிர்காலத்தில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்துடம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

Related posts: