புத்தூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஐவர் கைது !
Sunday, May 28th, 2017
யாழ். புத்தூர் கலைமதி மயான விவகாரம் தொடர்பாக ஐவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.புத்தூர் கலைமதி மக்கள் குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்யச் சென்ற போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இதனையடுத்து நெல்லியடிப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாகச் சிறுவனொருவன் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு - நியாயமான தீர்மானமொன...
மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்...
யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா - இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உ...
|
|
|


