புத்தாண்டை முன்னிட்டு 4500 பஸ்கள் சேவையில்!

Sunday, April 3rd, 2016

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து இந்த விசேட பஸ் சேவை ஆரம்பமாகும் எனவும், மீண்டும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பை நோக்கி குறித்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: