புதிய வரவு செலவுத் திட்டம் எந்தவொரு அரசியல் இலாபங்களையும் கருத்திக் கொண்டு தாயரிக்கப்படுவதில்லை – நிதி அமைச்சர்!
Friday, September 30th, 2016
புதிய வற் வரி சீர்திருத்தம் தொடர்பான சட்ட மூலம், சட்ட ரீதியான முறையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.புதிய வரவு செலவுத் திட்டம் எந்தவொரு அரசியல் இலாபங்களையும் கருத்திக் கொண்டு தாயரிக்கப்படுவதில்லை. எதிர்வரும் தேர்தலுக்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இன்னும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் 5 வருடங்களுக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!
வீதி ஒழுங்கு விதிகளை மீறிய 1900 சாரதிகளுக்கு அபராதம்!
தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!
|
|
|


