புதிய ஓடுபாதைமூலம் வருமானம் அதிகரிக்கும்!
Friday, July 22nd, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விமான ஓடு பாதையின் ஊடாக அரசாங்கத்திற்கு நாளாந்தம் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஓடு பாதை நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக நாளாந்தம் விமான சேவைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என அதன் தலைவர் ஆனந்த விமலசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 8.5 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய விமான ஓடு பாதை நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக அந்த தொகையை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.
Related posts:
கடவுளையே குழப்பும் இலங்கையர்கள் -நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - சபாநாயகர் அதிரடி முடிவு!
|
|
|


