புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

Thursday, December 28th, 2023

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் திங்கள் கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக தெரியவருகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக முதல்நாளே இலங்கை திரும்ப உள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டின் இறுதி அமைச்சரவைக்கூட்டம் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது. நத்தார் விடுமுறை காரணமாக கடந்த வாரம் அமைச்சரவைக் கூடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:

சாதாரணதரம், உயர்தரம் சித்தியில்லாவிட்டாலும் தொழிற் கற்கையைப் பயில மாணவர்கள் பதிவு செய்யவும் - யாழ். ...
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அரச நிர...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையில் திருத்தப்...

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு - வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸ...
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டம் - ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிர்ச்சி ...
இளைஞர்கள், யுவதிகள் போட்டித் தன்மை மிக்க உலக சந்தையை வெற்றிபெற தகுந்த சூழல் உருவாக்கப்படும் – ஜனாதி...