புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை – முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலி

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை. எனது கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். தற்போது நிலவும் இழுபறி நிலைக்கு கட்சிக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து வேறொரு கட்சி ஆரம்பித்து செயற்படுவதற்கான எதுவிதத் தேவையும் எனக்கில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்குமிடையில் இழுபறி தொடர்கிறது. இதனால் ஹஸன் அலி கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதுடன் இணைந்து புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
முதுமையடைவோரின் வேகம் இலங்கையில் அதிகரிப்பு!
வித்தியா கொலை வழக்கு: கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம்!
ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!
|
|