புகையிரத டிக்கெட் பரிசோதகருக்கு சீருடை அவசியம்!

Saturday, June 4th, 2016

புகையிரத பயணச்சீட்டை பரிசோதிக்க வரும் டிக்கெட் பரிசோதகர்கள், சீருடையுடன் இருப்பது கட்டாயம் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீருடை அணியாமல் வரும் டிக்கெட் பரிசோதகர்களால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

பயணச் சீட்டை பரிசோதிக்க வரும் போது சீருடை அணிந்திருக்கும் அதேவேளை, அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத பயணிகள் கேட்கும் சந்தர்ப்பத்தில் அடையாள அட்டையை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இதேவேளை, பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபருக்கு அபராதம் விதித்தல், அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு பிணை வழங்குதல், அபராதம் செலுத்த தவறுபவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் டிக்கெட் பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:


மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாக ஊடகங்களே திகழ வேண்டும் -...
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக குறைப்பு - நிதியமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!
தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக...