புகைப்பொருள் பாவனையை குறைக்க புதிய நடவடிக்கை!

Thursday, July 14th, 2016
சிகரெட் கொள்வனவிற்கான வரியை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 67 தொடக்கம் 72 சதவீதமாக உள்ள சிகரெட்டுக்கான வரியை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். புகைப்பிடிப்பவர்களின் பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைக்காக இந்த வரி அதிகரிப்பினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: