பிளக் மற்றும் சொக்கற்களுக்கு தரக்கட்டுப்பாடு!

Thursday, August 18th, 2016

மின் வழங்கலுக்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளக் மற்றும் சொக்கட் பாவனையினால் பல்வேறு மரணங்கள் சம்பவித்து வருகின்றன. அதனால்,. இவற்றைத் தவிர்க்கும் நோக்கில், இலங்கையினுள் பாவிக்கப்படும் பிளக் மற்றும் சொக்கட்களுக்காக, சர்வதேசத்தினால் அங்கிகரிக்கப்பட்ட  தரத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

‘தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது’ என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும், வாராந்த செய்தியாளர் மாநாடு, நேற்று (17) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இதன் பிரகாரம், தற்போது இலங்கையினுள் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் அடுத்த இரு ஆண்டுகளில் விற்பனை செய்யப்படுகின்ற அங்கிகரிக்கப்பட்ட தரத்தில் அல்லாத பிளக் மற்றும் சொக்கட்களை, அதன் ஆயுட்காலம் முடியும் வரை பயன்படுத்த வழிசமைத்து கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது’ என்றும் கூறினார்.

Related posts: