பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான நடமாடும் சேவை!

யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கான உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.
இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 24 ஆம் திகதி சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியிலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி உடுவில் பிரதேச செயலகத்திலும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்கு 26 ஆம் திகதி கரணவாய் பொன்னம்பலம் வித்தியாலத்திலும் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மருதங்கேணி பிரதேச செயலகத்திலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 15 ஆம் திகதி தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 16 ஆம் திகதி யாழ் மத்திய கல்லூரியிலும் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 17 ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்திலும் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 28 ஆம் திகதி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 29 ஆம் திகதி வட்டு இந்துக் கல்லூரியிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு செப்ரெம்பர் 30 ஆம் திகதி சென்.அன்ரனிஸ் கல்லூரியிலும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி காரைநகர் இந்துக் கல்லூரியிலும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்கு ஒக்ரோபர் 13 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரியிலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு ஒக்டோபர் 14 ஆம் திகதி வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் இடம்பெறும்.
இந்நடமாடும் சேவை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
Related posts:
|
|