பிரதேச செயலரை அச்சுறுத்திய இளைஞருக்கு விளக்க மறியலில்!

Monday, November 21st, 2016

வேலணை பிரதேச செயலரின் கடமைக்கு இடையூறு விளைவித்து. அச்சுறுத்தல் விடுத்தவர் எனக் கூறப்படும் இளைஞரை இன்றுவரை விள்ளகமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன் நேற்றுமன்தினம் உத்தரவிட்டார். வேலணை மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலணைப் பிரதேச செயலகத்துக்குச் சென்ற இளைஞர், கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அனுமதி தருமாறு கோரி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் பிரதேச செயலகருக்கு அச்சுறுத்தில் விடுத்தமை, அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த இளைஞரைப் பொலிஸார் கைது செய்திருந்நதனர்.

maxresdefault

Related posts: