பிரசன்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Thursday, September 7th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரின் மனைவிற்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டார்.

அதன்படி , இம்மாதம் 9ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை வெளிநாடு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேல்மாகாண முதலமைச்சராக இருந்த சமயம் , மீதொடமுல்லை பிரதேசத்தில் இடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக , 64 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டது தொடர்பிலான வழக்கில் இவர்கள் வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவ...
எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கை - சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள சுமார் 4...