பாவனையாளர்களை ஏமாற்றிய 95 வர்த்தகர்களுக்கு அபராதம்!

யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறி செயற்பட்ட 95 வர்த்தகர்களுக்கு 4 லட்சத்து 36 ஆயிரத்து 500ரூபா அபராதம் விதிக்கப்படாத பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
காலாவதியான பொருட்கள் விற்பனை, காலாவதியாக பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை மற்றும் நிறை குறைந்த பாண் உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 55 வழக்குகளுக்கு 1லட்சத்து 89ஆயிரத்து 500ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் பருத்திதுறை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 1லட்சத்து 62ஆயிரத்து 500ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டதாக இணைப்பதிகாரி மேலும் கூறினார். அதேபோல் தென்மாராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில் சிக்குண்ட 5 வர்த்தகர்களுக்கு 36ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் நீதிவான் சிறிநிதி நந்தசேகரன் மேலும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்றிற்காக 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
Related posts:
|
|