பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு!
Thursday, December 15th, 2016
பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயதுடைய மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான். எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
உயிரை பறிக்கும் இயர்போன்கள் : 6 மாதங்களில் 224 பேர் உயிரிழப்பு!
உலகில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு!
இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது!
|
|
|


