பாம்பு கடிச் சிகிச்சைக்கான மருந்து 6 மில்லியன் டொலர்!

இலங்கை அரசாங்கம் ஆண்டு தோறும் பாம்பு கடிக்கு உள்ளானவர்களின் சிகிச்சைக்காக 1.5 பில்லியன் ரூபாவைசெலவிடுகின்றதெனவும் இதற்குப் பயன்படுத்தும் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 6 மில்லியன்டொலர் செலவிடப்படுகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மருத்துவ பீட வைத்தியர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பொது சுகாதாரத் துறையினர்ஆகியோரைக் கொண்ட குழு இலங்கையில் ஏற்படும் பாம்பு கடி பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வில், இதுவரை பாம்புக்கடி பற்றிய ஆய்வு, அதன் முக்கியத்துவம் என்பன எடுத்துரைக்கப்படவில்லை என்பன குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை அறிக்கைகள் பாம்பு கடி பற்றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகியவற்றில் இருந்தே இவர்கள் தகவல்திரட்டியுள்ளனர்.
Related posts:
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் காணிக்ககளுக்கான வரிகளுக்கு விலக்கு!
கிளிநொச்சியில் கடும் மழை!
21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - நீதி அமைச்சரால் நாடாளுமன்ற உறுப்பின...
|
|