பாதுகாப்பை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவு – சீனா!
Tuesday, March 21st, 2017
இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங் நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்தபோது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். நீண்ட கால நட்பு நாடான இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், எதிர்காலத்தில் இராணுவ உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேங்க் வங்க்குவாங் உறுதியளித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளின் அபிவிருத்திக்காக சீனா வழங்கும் ஆதரவை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டியுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


