பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!
Monday, March 27th, 2017
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்பய்படவுள்ளனர்.
எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் இந்த இடமாற்ற உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் 100 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் தற்போது சுமார் 1300 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இடமாற்றம் செய்யப்படுவோரில் சிலர் 25 ஆண்டுகள் வரையில் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இடமாற்றத்தின் பின்னர் இளைய திறமையான உத்தியோகத்தர்கள் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
Related posts:
மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|


