பாதுகாப்புச் சேவை வழங்கலில் யாழ்.பல்கலையில் முறைகேடு – கோல்டன் ஈகிள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சேவை வழங்கலில் முறைகேடு இடம்பெறுவதாக கோல்டன் ஈகிள் பாதுகாப்புச் சேவை நிறுவனம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அரச தொழில் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொகையைக் குறிப்பிட்டுத் தாம் ஒப்பந்தம் கேட்கின்றபோதும் வேறு தொகையைக் குறிப்பிட்டு கேட்கும் வேறொரு நிறுவனத்துக்கே அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை ஊறுப்பினர்கள் சகலருக்கும் அனுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் - தகவல்...
நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!
வடக்கின் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் ஆளுநர் விசேட அறிவிப்பு!
|
|