பாதுகாப்புச் செயலர் கருணாசேனவுக்கு இருதய சத்திர சிகிச்சை!
Sunday, February 19th, 2017
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
கருணாசேன ஹெட்டியாராச்சி மருத்துவ விடுப்பைப் பெற்றிருப்பதால், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலராக முன்னாள் புத்தளம் மாவட்டச் செயலர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts:
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்கள் !
இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடி இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை..!
|
|
|


