பாதுகாப்பபு தரப்பினர் இருவரையும் ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
Thursday, July 4th, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும், கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், நாரஹேன்பிட்டி காவல்துறை மருத்துவமனையிலும் வைத்து குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று, இருவரையும் ஜூலை 9ஆம் நாள் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் மருத்துமவனைகளிலேயே தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் டெங்கு அதிகரிப்பு!
மயக்க மருந்து தெளித்து பேருந்தில் நகை திருட்டு!
எரிந்த New Diamond கப்பலின் எண்ணெய் கசிவினால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் - நாரா நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


