பாடசாலையில் அரசியல் வேண்டாம் – அமைச்சர் திகாம்பரம்!
Saturday, March 11th, 2017
பாடசாலை சுயமாக இயங்க வேண்டுமே அன்றி அரசியல் செய்யும் இடமாக இருக்ககூடாது என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயம் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சின் 70 இலட்சம் ரூபாய் நீதியொதுக்கீட்டில் 1500 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் பெயர்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தப்பின் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
கடந்த முறை இந்த பாடசாலைக்கு வருகைத்தந்த போது பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தேன் அவ்வாறு நிதியை ஒதுக்கினேன்.
ஒதுக்கப்பட்ட நிதியை செயற்படுத்தவிடாது மத்திய மாகாண அமைச்சினூடாகவே அபிவிருத்தியை செய்ய வேண்டும் என சில தடைகள் இருந்தனர். ஆதலால் காலம் கடந்த நிலையில் மீண்டும் எனது வாக்குறுதிக்கமைய தற்போது ஆரம்பித்துள்ளேன் நான் பாடசாலைகளில் அரசியல் செய்பவன் அல்ல மாதா பிதா குரு தெய்வம் என்பதை மதிப்பவன் குருவை கடவுளாகவே நேசிக்கிறேன்
எமது சமுதாயம் கல்விச்சமூகமாக வளர்வது ஆசிரியர்களாகிய உங்களின் கைகளிலே தங்கியுள்ளது தனவந்தர் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகள் எடுப்பது பெரியவிடயமல்ல வறிய மாணவர்களை கல்வியில் வளர்ச்சியடைய செய்வதே பாராட்டப்படவேண்டியது என அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


