பாகிஸ்தான் சந்தைகளில் இலங்கையின் உற்பத்திகளுக்கு வாய்ப்பு!

Tuesday, August 23rd, 2016

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு பாகிஸ்தான் சந்தைகளில் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

பல நகரங்களை மையப்படுத்தி இந்த கருத்தரங்குகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அமில கங்கானம்கே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செயிட் சகில் உசைனுடன், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை பிராந்திய சந்தைகளில் விற்பதற்கு பாகிஸ்தான சிறந்த இடம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானிலுள்ள மதத் தலங்களை தரிசிக்க இலங்கையர்களை அழைப்பதாகவும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: