பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு!

பழுதடைந்த நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2880 டின்மீன்கள் நுகர்வோர் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு 15 பெர்கியுசன் வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த டின்மீன்கள் 120 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திகதிகள் என்பன மாற்றப்பட்டு இவற்றுக்கு புதிய லேபல்கள் ஒட்டப்பட்டிருந்தாகவும் நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினர் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
முக கவசங்களுக்கு தட்டுப்பாடு - அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!
மஹிந்த ராஜபக்ஷ - பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு – ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இரண்டு நாள...
|
|