பல்கலை மோதல்: மாணவர்கள் மூவருக்கு அழைப்பாணை!

Thursday, August 18th, 2016

யாழ்.பல்கலையில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதலுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் தமிழ் மாணவர்கள் மூவருக்கு, யாழ்.மேல் நீதிமன்றம் நேற்றையதினம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குறித்த மாணவர்கள் மூவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.

யாழ்.பல்கலை விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த மாதம் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர்.

இதன்போது வாக்கு வாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொலிஸார் சம்பவவிடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவங்களையடுத்து பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் சிசிதரன் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு தேடப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே மேலும் 3 மாணவர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: