பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கடும் மழையும் பொழிந்து வருகிறது. அத்துடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது.
சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.
அத்துடன் யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்...
|
|