பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் மாயம் -தகவல் தரும்படி பொலிஸார் கோரிக்கை!
Monday, March 12th, 2018
பருத்தித்துறை குடத்தனை கிழக்கைச் சேர்ந்த 29 வயதான செல்வராசா அருந்தவச்செல்வன் என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது மனைவியான அருந்தவச்செல்வன் ரதி என்பவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 அடி அரை அங்குலம் உயரமும் மாநிறமும் பெரிய உடலமைப்பும் உடையவர் எனவும் இறுதியாக கறுப்பு நிற காற்சட்டையும் நீல நிற கட்டமிட்ட மேற்சட்டையும் அணிந்திருந்ததாகவும்பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர் பற்றிய விபரங்களை அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!
அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நி...
|
|
|


