பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Thursday, February 2nd, 2017

2017 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இருந்து பரீட்சையில் ஆள்மாறாட்ட சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது. இதன் காரணமாக தற்போது சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரீட்சாத்திகள் தற்போதிருந்தே விண்ணப்பங்களை அனுப்பி விரைவாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டையினை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அடையாள அட்டை தொடர்பான விண்ணப்பங்களையும் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

exam-sri-lanka

Related posts:


நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவ...
கட்டுமானத் துறையில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
விஞ்ஞான பாடத்தில் இடம்பெற்ற தவறு - மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்கும் முறைமை த...