பரீட்சைத் திணைக்களம் நடத்தும் பரீட்சைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு!

Thursday, October 20th, 2016

இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான கட்டணங்கள் யாவும் கடந்த செப்ரெம்பர் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய பரீட்சைக் கட்டணங்கள் ஆரம்பதரம், இடைநிலை, இறுதித்தரம் என்பன தலா 200,250,300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய சங்கீதம், எழுத்துப் பரீட்சை கட்டணம் 1 முதல் 4ஆம் தரம் வரை 500ரூபாவாகவம் 5 முதல் 8ஆம் தரம் வரை 700 ரூபாவாகவும் டிப்ளோமா பரீட்சைக் கட்டணம் 900 ருபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ன. மேலைத்தேய சங்கீதம் செய்முறைப் பரீட்சைக் கட்டணம் 1 முதல் 4வரை 600ரூபாவாகவும் 5முதல் 8வரை 800ரூபாவாகவும் டிப்ளோமா பரீட்சைக்கு 2000ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சகல பாடங்களுக்கும் 400ரூபாவாகவும் செய்முறைப் பரீட்சைகளுக்கு 300ரூபாவாகவும் அறவிடப்படும். க.பொ.த சாதரண தர பரீட்சையின் சகல பாடங்களுக்கும் 350ரூபா அறவிடப்படும். ஆசிரியர் கல்லூரி பரீட்சையின் சகல பாடங்களுக்கும் 2ஆம் தடைவ 600ரூபாவும் 3ஆம் தடைவ 800ரூபாவும் அறவிடப்படும். தேசிய கல்வியியற் கல்லூரியின் சகல பாடங்களுக்கும் இறுதிப் பரீட்சைக் கட்டணமாக 400ரூபாவும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பரீட்சைக்கான அனுமதிப் பரீட்சைக்கு 900ரூபாவும் அறவிடப்படும். இதேவேளை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகள், வினைத்திறமைகாண தடைப் பரீட்சைக் கட்டணங்களும் சான்றிதழ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

examLogText

Related posts: