பதிவற்ற வளர்ப்பு நாய்களுக்கு ரூ.10 ஆயிரம் தண்டம்!
Thursday, May 12th, 2016
வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்துகொள்ளாவிடின், 10 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிர்வாக எல்லைக்குள் இருக்கின்ற சகல நாய்களும், வருடாந்தம் பதியப்படவேண்டும்.
பதிவுக்கட்டணம் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
நாய்களைப் பதியும் போது, அந்நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி வழங்குவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
இரத்து செய்வதாக நான் கூறவில்லை – மறுக்கிறார் நிதி அமைச்சர்!
கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை!
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரி...
|
|
|


