பதவி நிலை அதிகாரி – யாழ் படைத் தளபதி சந்திப்பு!

பாதுகாப்பு பிரிவின் பதவி நிலை அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்னவின் யாழ் விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை சந்தித்துள்ளார்.
பலாலி யாழ் படைத் தலைமையகத்தில் முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி யாழ் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கினார்.
பின்னர் பாதுகாப்பு அதிகாரியின் தலைமையில் முப்படையினரது பங்களிப்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி தனது விஜயத்தை யாழ் படைத் தலைமையக நினைவு புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் படைத் தளபதிகளுக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலை ஒருநாள் வருமானம் 17.6 கோடி!
மீண்டும் GMOA வின் தலைவராக அனுருத்த பாதெனிய தெரிவு!
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
|
|