பணம்கேட்டுத் தர மறுத்தமையால் தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கிய தனயன்!

ஒரு இலட்சம் ரூபா பணம் கேட்டுத் தர மறுத்தமையால் ஆத்திரமடைந்த மகன் தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இச் சம்பவம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மகன் தந்தையிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்தே ஆத்திரமுற்ற மகன் தாய் தந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். .
குறித்த தாக்குதலையடுத்து இன்னொரு மகன் யாழ்.பொலிஸாரிற்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்துப் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்குச் சென்றுள்ளனர். எனினும் தனது மகன் மீது முறைப்பாடு செய்யத் தாயார் மறுத்துள்ளார். இதன் காரணமாக மகனைக் கைது செய்ய முடியாமல் பொலிஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி - நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய...
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...
பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளு...
|
|