படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை- இராணுவப் பேச்சாளர்!

Friday, September 9th, 2016

தமது சொந்தத் தேவைக்காகவே இராணுவத்தினர் வடக்கில் விவசாயம் செய்கின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினர் விவசாயம் செய்து அறுவடையை விற்பனை செய்வதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகும். வர்த்தக நோக்கங்களுக்காக படையினர் விவசாயம் செய்யவில்லை. வடக்கில் இராணுவத்தில் மிக நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாய நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

இதனால் இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம் என பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Brig-Roshan-Seniviratne-380-seithy

Related posts:

தற்போதைய நெருக்கடிக்கு அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு - பொதுநிர்வாக அமைச்சின் செ...
இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் - மார்ச் மாதத்துக்குள் நிறைவு செ...
வடக்கில் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் - சிரேஷ்ட பிரதிப் பொ...