நோர்வேயின் பழமை வாய்ந்த முத்து கொழும்பு துறைமுகத்தில்!
Tuesday, October 25th, 2016
உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து என்று அழைக்கப்படும் எஸ் எஸ் சோலன்டட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இந்த மாதம் 30ஆம் திகதி வரையில் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் உலகம் முழுவதும் 2 வருடகால பயணத்தை மேற்கொண்டு 70 உயர் பாடசாலை மாணவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது இலங்கையிலுள்ள கடல் சார்ந்த கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் வருகை தந்துள்ள 70 மாணவர்களுக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சிறைச்சாலை பதவிகளில் மாற்றம்!
எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் ...
சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு - தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண...
|
|
|


