நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!

Thursday, April 5th, 2018

கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இந்த ஆண்டு காலபோகத்துக்கான நெல் கொள்வனவை இடை நிறுத்தியுள்ளது.

இந்த நெல் கொள்வனவு நிறுத்தப்பட்டதால் சங்கத்திற்கு பல இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 நெல் கொள்வனவின் போது நெல்லுக்குரிய வற்றல் கழிவு வழங்குவதற்கு அனுமதி வழங்க கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மறுத்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் நெல் கொள்வனவில் ஈர நெல்லுக்கு வழங்கப்பட்ட வற்றல் கழிவு நிதி மீள் அறவிடுமாறு திணைக்களம் சம்பந்தப்பட்ட முகாமையை கேட்டது.

வற்றல் கழிவு வழங்கப்பட்டதற்கான முழுப்பெறுமான நிதி செலுத்தப்பட வேண்டும் என கேட்கப்பட்டதை அடுத்து நெல் களஞ்சிய முகாமையாளர் திடீர் சுகவீனம் அடைந்து கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் சங்கத்தின் அபிவிருத்தி அதன் உடனடி திட்டங்களை சங்கங்களால் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெல்லுக்கு வற்றல் கழிவு வழங்கினால் மட்டுமே நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என்று சங்கம் முடிவெடுத்தது.

இந்த நிலையில் சங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல் நிறுத்தப்பட்டன. நெல் கொள்வனவு நிறுத்தப்பட்டதால் சங்கம் பல இலட்சம் ரூபாவை இழந்துள்ளது. சங்கத்தின் அரிசி ஆலையும் நெல் கொள்வனவு இன்றி முடங்கும் நிலையில் உள்ளதாக சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts: