நெல் கொள்வனவு செய்கிறது அரசு!

அரிசி விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காக நெல் கொள்வனவு சபையிடமிருந்து இன்று முதல் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய அரசாங்க மற்றும் தனியார் ஆலைகளுக்கு இந்த நெல் விநியோகிக்கப்பட்டு, அரிசியாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த ஆலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை ஒரு கிலோ 78 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அரிசி விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடுவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் காட்டம்!
யாழ்ப்பாண பொலிசார் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த ...
|
|