நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!

வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நெற் செய்கையில் 67 வீதம் அழிவடைந்துள்ளது.
இவ்வாறு அழிவடைந்த நெற் செய்கைக்கு மீள்நடுகை செய்வதற்கும் போதிய நெற் பயிர் இன்மை காரணமாக விவசாயிகளுக்குப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் நவாலி, ஆனைக்கோட்டை, கட்டுடை, பண்டத்தரிப்பு மற்றும் இந்த பிரதேச விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர்.
பெரும்போக நெற் செய்கைக்கு நிலம் உழுது, பண்படுத்தி, விதை நெல் கொள்வனவு தொடக்கம் களைநாசினிக்கு மருந்துகள் தெளித்த நிலையில் விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரர் தற்கொலை !
கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் ...
நத்தார் பண்டிகையை தவிருங்க - யாழ் மக்களிடம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை!
|
|