நெடுந்தீவில் ஆசிரியை கடத்தல் இருவர் கைதாகி பொலிஸ் காவலில்!
Thursday, December 1st, 2016
நெடுந்தீவில் வீதியால் சென்று கொண்டிருந்த யுவதியை 4பேர் கொண்ட இளைஞர் குழு கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் நெடுந்தீவு வெட்டைகாட்டுப் பகுதியிலுள்ள மாதிரிப் பனந்தோட்டப்பகுதியில் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
நெடுந்தீவு பிரதேசசபை கலாசார மண்டபத்தில் மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சென்று திரும்பிய பாடசாலை ஆசிரியை ஒருவரை நெடுச்தீவு வெட்டை பாடு மாதிரிப் பனந்தோட்டப் பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் அவ்வீதியால் வந்த கிராமசேவையாளர் வீதியில் பெண்களின் துவிச்சக்கரவண்டியும் அருகில் கைத்தொலைபேசி, செருப்பு என்பன கிடப்பதைக் கண்டு சந்தேகம் கொண்டுள்ளார். இதன்போது அவரின் அருகில் பயணித்த இளைஞர்கள் சிலர் பெண் ஒருவரின் அவலக்குரல் கேட்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் துரிதமாகச் செயற்பட்ட கிராம சேவையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதடன் அருகில் இருந்த மாதிரி பனம் தோட்டப் பகுதிக்குள் சென்று அவதானித்துள்ளனர். இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டதுடன் விசாரணைகளின் அடிப்படையில் இரு இளைஞர்களைக் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்வத்துடன் தொடர்புபட்டு தப்பியோடி தலைமறைவா இருவரை தேடி வருகின்றனர். மேற்படி கடத்தல் சம்பவத்துக்கு ஒரு தலைக்காதல் காரணமாக இருக்கலாம் என விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

Related posts:
|
|
|


