நீர் முகாமைத்துவ பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

குடிதண்ணீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து நாள் வெளிநாட்டுப் பயிற்சிப் பட்டறை சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இருந்து இதற்கான பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதற்காக மாநகர, நகர, பிரதேச சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை வெளிநாட்டு வளங்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் என்.ஆர்.அனீஸ் கோரியுள்ளார்.
பயிற்சி நெறி எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை சிங்கப்பூர் நான்ஜாவ் தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகைமைகளின் போட்டோபிரதிகளுடன் விண்ணப்பம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
வேலை நேர மாற்றத்தால் அலுவலகங்களின் சேவைகளுக்கு பாதிப்பில்லை!
டைனமட் வெடித்ததில் ஒருவர் பலி” மற்றொருவர் படுகாயம் – கிண்ணியாவில் சம்பவம்!
வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு - அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவிப்பு!
|
|