நீர்த்தேக்கத் திட்டத்தை சுற்றி பாதுகாப்பு அணைச்சுவர் வேண்டும் என கோரிக்கை!

Saturday, July 28th, 2018

நவாலி – கட்டுடை இணைப்பில் உள்ள 150 வருட இடிகுண்டு நீர்த்தேக்க திட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அதனை சுற்றி முதலில் பாதுகாப்பு அணைச்சுவர் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் நீடித்த பலாபலனை விவசாயிகளும் ஏனைய பொதுமக்களும் பயன்படு நிலையைப் பெறலாம்.

தற்போது 150 வருட பழைமை வாய்ந்த ஆழம் காணமுடியாத இடிகுண்டு நீர்த்தேக்க திட்டம் மண் நாளுக்கு நாள் தூர்ந்து மூன்று புறமும் உள்ள வீதிகள் உட்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கம்பிவேலி அமைப்பினால் குறைந்தது 5 அல்லது 7 வருடங்கள் மட்டுமே பாதுகாக்க முடியும். இதனால் மேலும் தூர்வை ஏற்பட்டு இடிகுண்டு முற்றாக அழிந்துவிடும்.

இத்திட்டத்திற்காக செலவிடும் நிதியை முழுமையாக மதிப்பீடு செய்து கொங்கிறீட் சுவர் அமைத்து பாதுகாப்பதன் மூலம் பேண்தகுநிலையை ஏற்படுத்துவதுடன் விவசாயிகள், பொதுமக்கள் கூட பயன்படுத்தும் நிலையேற்படுத்துவதுடன் எதிர்காலத்தில் சோலர் மின் மூலமாக நீர்சுத்திகரிப்பு பொறிமுறையூடாக குடி தண்ணீரை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்த முடியும்.

 

Related posts: