நீரோடையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஒருவர் கைது!
Sunday, April 10th, 2016
சட்ட விரோதமான முறையில் தோட்ட நீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த, ஒருவரை எல்ல பொலிஸார் இன்று (09.) கைது செய்துள்ளதுடன் இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிங்கராவை பெருந்தோட்டத்திலேயே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.டபள்யூ கருணாரட்ணவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபரைக் கைது செய்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Related posts:
இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்பு வழங்க தொழிற்சங்கங்கள் மறுப்பு!
வடக்கில் இனவிருத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!
உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பின்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம் - தேசிய சமாதான பேரவை!
|
|
|


