நீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்தள்ள செய்தி!
Tuesday, August 11th, 2020
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாவாணத்தின் பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இவற்றை மீறினால் 25,000 அபராதம்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சேமநலனுக்காக விசேட வேலைத்திட்டம் - அமைச...
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
|
|
|


