நீதிமன்ற விவகாரங்களில் தலையிடவதில்லை – ஜனாதிபதி!

நீதிமன்ற துறையில் நியமனங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட தேவைக்கு நியமனங்கள் மேற்கொண்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
நீதிமன்ற துறையில் நியமனங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட தேவைக்கு நியமனங்கள் மேற்கொண்டதில்லை. அண்மையில் ஊடகங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நியமனம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றதுறைசார் நிறுவனங்களின் அனுமதியும் இந்த நியமனத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற விவகாரங்கள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அன்றும் இன்றும் என்னும் எனது நோக்கமாகும். 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக எனது அதிகாரங்களின் ஒரு தொகுதியை நாடாளுமன்றம் மற்றும் ஏனைய சுயாதீன நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|