நீதிமன்றிற்கு நாகரீகமாக வர வேண்டும் –  வெளிநாட்டு பெண்ணை எச்சரித்த நீதவான்!

Friday, May 27th, 2016

நீதிமன்றிற்கு நாகரீகமான முறையில் வருகை தர வேண்டுமென உக்ரேய்ன் நாட்டு பெண் ஒருவருக்கு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள உக்ரேய்ன் நாட்டு பெண் ஒருவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகரீகமான ஆடைகளை அணிந்தே நீதிமன்றிற்குள் பிரவேசிக்க வேண்டுமென குறித்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு நீதவான் தெரிவித்துள்ளார். உக்ரேய்ன் நாட்டுப் பெண் வழக்கு விசாரணை ஒன்றுக்காக கோட்டே நீதிமன்றிற்கு நேற்று சென்றிருந்தார்.

ஒரேஞ்ச் நிற அரை காற்சட்டை மற்றும் நீல நிற டீசேர்ட் அணிந்து இந்தப் பெண் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார். எலிசபத் கோல்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு நீதவானினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

25 லட்ச ரூபா பெறுமதியான ஆபரணங்களை வீட்டுப் பணிப் பெண் திருடிய சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக இந்தப் பெண் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் சுதந்தமலர் என்ற வீட்டுப் பணிப் பெண், இந்த ஆபரணங்களை திருடியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பெண், சட்டத்தரணி ஊடாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: